பாரத மாதாவின் கேள்வி

எங்கே செல்கிறாய் நல் மதியுற்ற இளைஞனே?!
உனக்குள்ளும் இருக்கிறான்
விதி மாற்றும் கலைஞனே!
பாரதத் தாய் என்மேவ்
ஜதி கெட்டு பரதமாடும் பாதகர்
கண்டாயா?எங்கே போனது உன் மறம்? முறத்தால் புலி
விரட்டிய மறத்தமிழச்சி
மகனல்லவா நீ?மரத்துப் போகுமோ உன் மறம்?
விதி மாற்றும் மதி உன்னுடன்
இருக்க,திரவியம் தேடி உன்
திறமை விற்க திரை கடல்தாண்டுவது ஏனடா?
உன் பால் என்பால் புகட்டியது
மெய்யென்றால், உன் மெய்
வளைத்து திறம்பட திறமை
காட்ட இந் நாட்டில் வழி பல உண்டு கேளடா! உன் கோளொன்றும் கேடில்லை காணடா!🌸
உன்னுடலில் உள்ளது வெறும்
சதையல்ல,பசுமைப் புரட்சியின் விதை! அதை நற்கருத்தாய் மக்கள் மனதிலே விதை!எளியோரிடம் தாயாக இரு! வன் மனம் கொண்டாரிடம் தீயாக சீறு!உலக அரங்கில் பாரதப் புகழ்
கொண்டு சேரு!

எழுதியவர் : பாலமுருகன்பாபு (31-Jan-18, 2:32 am)
பார்வை : 158

மேலே