ஆர்ப்பரித்த மனம்
நாணத்தை கட்டுப்படுத்த
நான்குவிரலையும் இணைத்தாயோ
உயிருக்குள் உயிராகஎன்னை
உனக்குள்ளே புதைத்தாயோ
ஆடைகளின் பாவனை
ஆழ்கடலில் தள்ளுதடி
ஆட்சிகொள்ள என்மனம்
ஆர்ப்பரித்து எழுந்ததடி
விழிபார்த்த வேகத்தில்
விதியை சபித்தேனடி
விரும்பியவள் கண்முன்னிருக்க
விருப்பங்களை மனதில்புதைத்தேனடி
நீசிரித்த புன்னகையில்
நீராக நான்உருகுவேன்
மணப்பந்தலில் மூணுமுடிச்சிட்டு
மங்கை உன்னைப்பருகுவேன் !...