பெண்ணடிமை
பெண்ணடிமை முற்றிலும் மறைந்து விட்டதா?
🌸🌸🌸
அன்றே பதியிழந்த 'ஸதி'யை 'சதி'யேற்றி வைத்த
'சதி'கார நாய்கள்தானடா நீங்கள்!
இன்று வரையிலும் கூட அதே பெண்ணடிமை குதியாட்டம்தானே போடுகின்றீர்,மதியோட்டம்
மயங்கிப்போன மகா அரக்கர்களே!உங்கள்முன்
ஜதியாட்டம் ஆடுவது பெண்கள் வேலை,அதை,(போதை)சுதியாட்டத்தோடு ரசிப்பதுதான் ஆண்கள் வேலையா?விதியாட்டம் ஆடும் ஆட்டத்தில் நீங்கள்
வீழ்வது நிச்சயம்! தாயாய் ,சகோதரியாய் மதிக்கும்
ஆண் குலத்துடன் பெண் குலம் நிம்மதியாய் வாழும்,
(இது முன்னொரு நாளில் நினைத்தது.இன்று???)