அப்பா🙏
அம்மாவைப் பற்றி எப்போதும் பேசும், எழுதும் நாம் அப்பாவைப்
பற்றி நினைப்பது குறைவே;
தானே கலங்கி விட்டால் குடும்பம்
தாங்காதென தூங்காது தன்னை
கல்லாக்கி கொண்டவர்;
ஆதலின் அவர் கல்லாய் கண்டோம்★
தன் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்ச தெரியாதவர்,ஆனால் நம்மை நெஞ்சில் வைத்து தாங்கியவர்★
நாம் அழுதால் கடுமுகம் காட்டும் அவர் உள்ளே அழுவார், வெளியே
தெரியாது★
அவர் சொல் மந்திரம் என்று எண்ணாமல் தொந்தரவு என நினைத்து விலகி ஓடி, வாழ்க்கையில்
துன்பப்பட்டு அவர் மடி தேடும்போது
அவர் மடிந்திருப்பார்★
அப்போதும் அவர் சிரித்திருப்பார்;
புகைப்படத்தில்★
நாம் சுகத்தில் குளித்ததும், ஆனந்தத்தில் திளைத்ததும் அவர் வேர்வையில் என்று ஒருபோதும்
பார்வை படுத்தியதில்லை★
முதுமையில் முதியோர் இல்லத்தில்
சொர்க்கம் காண்பவர்★
அவருக்கு உன் இதயத்தில் இடம் தராவிட்டாலும், வாழும் வீட்டிலேயே
போகும் வரை வாழ விடுங்கள்🙏