இறையே போற்றி

இறைவா உனை வணங்கி நின்றேன்.
நிறைவாய் வாழ வரம் தாராய்
குறையாய் எனக்கேதும் இல்லாமல்
மறைவாய் இருந்தாவது அருள் புரிவாய்
மறை நான்காய் நிற்கும் தெய்வமே
பறை கொட்டி பாடுவேன் உன் திருநாமம்
சிறை வைப்பேன் பக்தியை என் நெஞ்சகலாது
இரைக்கென்று ஆகாரம் தந்திடுவாய் என்
அரைக்கென்று சிற்றாடை கொடு அது போதும்
உரைப்பேன் ஆபத்தில் அபயம் வேண்டி உன் பெயரை
விரைவாய் வந்தெனை காத்தருள்வாய்
புரையோடிக் கிடக்குதய்யா பாவங்கள் பூமியிலே
பிறை சூடி பித்தனே நெற்றிக்கண் திறந்து பாராய் நீ
தரை மேல் இப்பிறவி போதுமய்யா இறைவா
கரை சேர்ப்பாய் இப்பிறவி பெருங்கடலில் இருந்து
நரை வந்து தள்ளாடினும் உனை மறவேன்
நுரை கக்கி உயிர் விடும் போதும் உனையே நினைப்பேன்
திரை போட்டு மறைக்காதே உன் திருமுகத்தை
சுரை வேறு முளைக்குமோ விதை ஒன்று போட்டால்
இறை உனை நினைக்க முக்தி அன்றி வேறு கிடைக்குமோ
துறைமுகம் சேரும் கலங்கரை விளக்கம் கண்ட கலம் போல்
இறைவனடி சேருவேன் பல கோயில் நின் தரிசனம் கண்ட பின்னே

எழுதியவர் : ஷோபாபு (6-May-23, 8:54 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 123

மேலே