காதல்

நான் உனை நேசிப்பதும்
உன் காதல் யாசிப்பதும்
எனக்கு வாடிக்கையாகி விட்டது.
என் காதல் யோசிப்பதும்
சுடுமொழி வாசிப்பதும்
உனக்கு வாடிக்கையாகி விட்டது.
நான் உன் பெயரை சுவாசிப்பதும்
நீ எனை தூஷிப்பதும்
என்றென்றும் நிகழும் அன்றாட நிகழ்வானது
நான் உன் அன்பு திரட்டி காமன் தேர் ஏற நினைக்கிறேன்.
நீயோ எனை விரட்டி காலன் தேர் ஏற வைக்கிறாய்

எழுதியவர் : ஷோபாபு (6-May-23, 9:01 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே