நீ இல்லாமல்🌷

தரகின்றி தகைந்த தங்கச் சிலையே,
மனமிணைந்து மடியேறிய மங்கையே,
என் கனவு கன்னிகளை என்மனமிருந்து களைந்தெடுத்த
காரிகையே,
சித்திரை வெயிலில் நான் ஒதுங்கும்
வேப்ப மரமே,
அமாவாசை இருட்டில் என் வழி காட்டும் மின்மினியே,
என் துன்ப வெள்ளத்தை தடுத்தேற்கும் அணைக்கட்டே,
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கும் போது உயிர் இணையும் சுவாசமே,
நீயின்றி என் உயிர் கடிகாரம் ஒரு
நொடியும் ஓடாதம்மா உண்மையே!

எழுதியவர் : பாலமுருகன் பாபு (23-Apr-18, 2:29 pm)
பார்வை : 477

மேலே