காதலோடு ஒரு முதல் சந்திப்பு

நான் வழி பார்த்து ஏங்கி நின்றேன் நீ வருவாய் எனவும் வருவது நீயா எனவும்,நேரம் நகர்ந்தது என் விழியோ உனை பார்க்க ஆவல் கொண்டது...நீ தூரத்தில் வரும்போதே உனை அடையாளம் கண்டுகொண்டேன்
நீயும் எனை கண்டுகொண்டாய் என் பாதம் உனை நோக்கி நடக்க உன் பாதம் எனை நோக்கி நடக்க கடிகாரத்தின் முட்கள் ஏனோ மெதுவாக நடந்தது...நெருங்கினோம் நான் உன்னையும் நீ என்னையும்,விரைந்து நடந்த கால்களோடு சேர்த்து கைகளும் விரைந்தன உன்னை அப்படியே அள்ளி என் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வேண்டும் என்று....ஒரு வழியாக உன் விரலோடு என் விரல் கோர்த்தேன் சில நொடிகள் உன் உடலோடு என் உடல் பூட்டினேன் உனை பார்வையால் அணைக்கும் போதெல்லாம் உன் இதயத்தோடு என் இதயத்தை சேர்த்து ஒரே இதயமாக துடிக்கவிட்டேன்....... மீண்டும் உன்னை எத்தனை முறை சந்தித்தாலூம் இம்முதல் சந்திப்பு போல் தித்திக்குமா.......! இல்லை என்
நெஞ்சம் தான் அதை மறந்திடுமா.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (23-Apr-18, 1:56 pm)
பார்வை : 57

மேலே