arasu இயல்

ஊடகமும் செய்தியும் பொய்யாய் போனதால்
உண்மையை எங்கே என்று தேடுகிறோம்
வேண்டாத அணு உலையை
திணித்துவிட இடம் இருக்கு
வேண்டும் மருத்துவம்
திறந்திட இடம் இல்லையா?
இலைக்கு கொடுத்த மரியாதையை
என் இனத்துக்கு கொடுக்க மறந்தது ஏன் ?
இயற்கை சீற்றத்தை ஏதும் சொல்லவில்லை
காத்திட மறந்தது மறுத்தது ஏன் ?
காற்றை வித்தவனுக்கு
சீக்கிரமாய் (----------- தண்டனை ) விடுதலை
நீட் கொலைக்கு
தீர்ப்பு அலை எங்கே
பிரிவினை தான் பெருகி கிடக்குது
மன்னருக்கும் மக்களுக்கும் தீர்ப்பு எனும் பெயரில்
மக்களாட்சி மறந்து பல நாள் ஆச்சு
இது --------மன்னார்------ ஆட்சி னு யாருக்கும் தெரியாமலா போச்சு