TN 45 AX 3565

முறுக்கிதான் பறக்கிறேன்
முகத்தில் சிரிப்போடு

உதைத்தும் அடித்தும்
உறுமல் மட்டும் உன் பதில்

பிரிவு இல்லை கைகளில்
பாதை உள்ள தூரம் வரை

ஒலியோடு நானும்
அலறுகிறேன் இவனோடு

சிக்கல் காதலாய்
சோதனை உன்னோடும்

சகித்து கொள்கிறேன்
என் சகி உன்னோடு

அழைத்து செல்ல
அவனை பழகினேன்

என் அத்தனையும் நீ என்று
இப்போது புரிகிறேன்

எழுதியவர் : வான்மதி கோபால் (6-Jan-18, 4:05 pm)
பார்வை : 86

மேலே