கவிதை கிறுக்கன்

பாலைவனமாய் இருந்தேன்
காதல் எனை நந்தவனமாக்கியது
கரடு முரடாக இருந்தேன்
காதல் எனை மென்மையாக்கியது
காட்டாறுப்போல் இருந்தேன் காதல் எனை கங்கை தீர்த்தமாக்கியது...
வேங்கையாய் சுற்றித்திரிந்தேன்
காதல் எனை ஆட்டுக்குட்டியாக்கியது
முட்களாய் இருந்தேன்
காதல் எனை
பூக்களாய் மாற்றியது
கல்வியில்லா
கிறுக்கனாயிருந்தேன்
காதல் எனை கவிதை கிறுக்கனாக்கியது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Jan-18, 4:16 pm)
Tanglish : kavithai kirukan
பார்வை : 224

மேலே