இப்போது ஏமாந்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
துயிலுக்கும் உறக்கமில்லை
என்னால் இரவுகள் விழிக்கிறதே!
மலர்களின் கூச்சலினால்
மனம் மார்கழி ஆகிறதே!
வியந்து விழிகள் நோக்கும்
அழகே உன்னழகை சபிக்கும்
தமிழ் மொழியின் ஒலியினிலே
தேன்குடித்த முல்லை இதழென்றும்
பால் வண்ணப் பருவத்திலே
விழிவீசும் ஒளி கனியென்றும்
நதியருவி அழகெங்கும்,
பறவையிசை பாடலெங்கும்,
புவியெங்கும்... ஒப்பிட்டு உன்னால்
நான் புலம்பிய நொடிகளை
வெகுநேரம் நோட்டமிட்ட கம்பன்
நான் சொல்லா கவிச்சுவையை
காண விழைவேனென்று
நின் தரிசனம் கண்டான்...!
தன் விழியின் சிறுமை மேல்
கோபம் கொண்டு
போதாது...
இவ்வழகைக் கண்டு கவி கூற எனக்கூறி
என் கவிக்கு ஈடுதர பாவையில்லையென்று
இத்தைனை நாள் கர்வம் கொண்டேன்
"இப்போது ஏமாந்தேன்"
உன்னாலென கவிதந்தான்.