உண்மைக்காதல்
காலநேரம் காணாது
காதலுக்காக தவமிருந்தேன்
காதலென்னை காணவில்லை
காவலனாக விழித்தேயிருந்தேன்
உன்னைக் கண்டேன்
உடனேயெந்தன் தவம்கலைத்தேன்
உண்மையான காதலை
உன்மனதில் விதையாகவிதைத்தேன்
விதிசெய்த சதியால்
விலகிப்போனேன் உன்னிடமிருந்து
விலையுயர்ந்த ஏமாற்றம்
விரைவாய்கொடுத்தது அருமருந்து
மதுபானம் என்னும்
மதிமயங்கச்செய்யும் நீர்
மனமுடைந்து சிந்தினேன்
மங்கைஉன்னால் கண்ணீர்
காத்திருந்து பார்த்தேன்
காதலென்னை தேடவில்லை
காதலித்த பெண்ணவள்
காதலன்என்னை நாடவில்லை
அவளை மறக்கநினைத்தேன்
அவளால் காதலைவெறுத்தேன்
அவளென்று ஒருவளைநினைத்தேன்
அவளையே திருமணம்செய்தேன்
தோல்வியுற்றது முதல்காதல்
தோள்கொடுத்தது புதியகாதல்
தோல்வியில்லாதது என்னடாகாதல்
தோல்வியைவெல்லும் உண்மைக்காதல் !...