மதுவுக்கு நான் அடிமை
கண்டதும் பூத்த காதல் உன்னைக் காணக்காண
மூத்து நின்று என்னை இன்று சித்ரவதை செய்கிறது
உன்னுடல் பருகத் துடிக்கும் மதுக்கிண்ணம்
பக்கம் வைக்கும் சுவையூட்டம் உனது கவின்கன்னம்
எனதிளமை மதுவுக்காய் ஏங்கித் தவிக்கிறது
கடைச்சரக்கு வேண்டாம் உடல் கெட்டு விடுமாமே
நீ காய்ச்சிய மதுவை மாத்திரம் எனக்குப் பரிமாறிப்பார்
என் வாழ்நாள் முழுவதையும் உன்னோடு
போதையில் களிக்கவும் எனக்கு இஷ்டம்தான்
ஆக்கம்
அஷ்ரப் அலி