niki - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : niki |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 36 |
தண்ணீரின் சுவையை விட
எங்கள் கண்ணீரின்
சுவை அதிகமா?
எத்தனை முறை பருகுவீர்கள்
பதுங்கு குழியின் மறைவில்
எங்கள் குழந்தைகளின்
பள்ளிக் கனவும்
மறைக்கப்படுகிறது
பறவைகள் பயந்து போகுமென்று
பட்டசுகளே வெடிக்காமலிருக்கும் போது
எங்கள் உடல்கள் வெடிக்க நீங்கள் பீரங்கிகளை வெடிக்கலாமா?
சமாதானக் கொடியின் வெள்ளை நிறம்
உங்களின் துரோகம் பட்டு
சிவப்பு நிறமானது
நாங்கள் என்ன விலங்குகளா
முள்வேலி என்னும் கூண்டில்
அடைத்து வைக்க
உங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல
எங்கள் குழந்தைகள் மட்டும்
சுடுகாடு செல்லவா !
தேதி ஒன்று
கை பேசியில் குறுஞ்செய்தி
முகத்தில் மகிழ்ச்சி
ஒரு நாள் பணக்காரன் நான்...
பல கொடுமைகளை வேரோடு
சாய்த்தார்கள் அறிஞர்கள் .....
சில கொடுமைகளை நாகரிக
வளர்ச்சியால் மனிதனே
உணர்ந்து திருந்தினான்.....
இன்னும் பல கொடுமைகள்
கொஞ்சம் குறைந்துள்ளது
இன்னும் சில கொடுமைகள்
முடி மறைத்து நடந்த வண்ணமே உள்ளது .....
ஆனால்
ஒரு கொடுமை மட்டும் அன்றிருந்தது
போலவே இன்றும் தொடர்க்கிறதே ..................................
எந்த மாற்றமுமில்லை ......முன்னேற்றமுமில்லை .......
அதை செய்ய வெக்கப்படுவதுமில்லை ......
தவறென்று உணர்வதுமில்லை .....
இதை நியாயப்படுத்த ஊரில்
நாலு பேருமுண்டு ......
"இது தான் முறை " என்று சொல்ல
மூடநம்பிக்கையில் மூழ்கிய பலருண்டு ....
அறிவியலின் முன்னோடி!!
எம்மொழிக்காரனுக்கும்,
பூர்வீகம் வேற்றுமொழி,
என் தமிழனுக்கு மட்டுமே,
தன் மொழியே பூர்வீகம்!!
கலைகள் அறுபதினாங்கினையும்,
கற்றுத் தந்தவன் என் தமிழன்,
பூஜ்யம் என்றொரு எண்ணிருப்பதை,
ஊருக்கு அறிவித்தவன் என் தமிழன்!!
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்,
என் வள்ளுவனைப் போல் எவனுண்டு?
காப்பியப் பொருளை குறிப்பால் உணர்த்த,
என் கம்பனைப் போல யாருண்டு?
உலகப் பொதுமறை திருக்குறள் தமிழே,
உயிருக்கு உயிரூட்டும் சீவக சிந்தாமணி தமிழே,
கற்பினை உலகுக்குணர்த்திய சிலப்பதிகாரம் தமிழே,
கேட்போரை மெய்மறக்கச் செய்யும் மணிமேகலை தமிழே!!!
இங்கு ஷேக்ஸ்பியர்கள் ஆயிரம்,
இலக்கியத்தை
என் பாலை நிலத் தேடலின்
முதல் பனித்துளியே.
காய்ந்த மலா்த்தோட்டத்தினூடே
தப்பி பிழைத்து மலர்ந்த உயிா் மலரே
உன் கண்ணில் தெறிக்கும் சிரிப்பினால்
போகன் வில்லாவிற்குள்ளும்
வாசனை கர்ப்பந்தரிக்கும்.
இடி வள்ளல் இரக்கத்தோடு
பரிசளித்த ஊற்றே
யுகப் பூக்களின் துணை கொண்டு
இடையராது செய்த தவத்தினால்
சிப்பிக்குள் உரு கொண்ட
அரிய முத்தே
நெப்பந்தசிற்கு உயிர் தரும்
நைட்ரசனே.
நீ கோபம் கொள்ளும் வேளையில்
தவிர்க்க இயலா சந்தேகம்
பூக்களுக்குள்ளும் எரிமலையா?
உடைந்து உதிரும் உன் பாதி
பால்பற்கள்
அண்டாா்டிகாவின் உடைந்த பனிப்பாறைகளோ!
சிலுவைக்குள் முளைத்த
சின்னஞ்சிறு சிறகே.
மூங்கில்காட்டிற்கு
என் பாலை நிலத் தேடலின்
முதல் பனித்துளியே.
காய்ந்த மலா்த்தோட்டத்தினூடே
தப்பி பிழைத்து மலர்ந்த உயிா் மலரே
உன் கண்ணில் தெறிக்கும் சிரிப்பினால்
போகன் வில்லாவிற்குள்ளும்
வாசனை கர்ப்பந்தரிக்கும்.
இடி வள்ளல் இரக்கத்தோடு
பரிசளித்த ஊற்றே
யுகப் பூக்களின் துணை கொண்டு
இடையராது செய்த தவத்தினால்
சிப்பிக்குள் உரு கொண்ட
அரிய முத்தே
நெப்பந்தசிற்கு உயிர் தரும்
நைட்ரசனே.
நீ கோபம் கொள்ளும் வேளையில்
தவிர்க்க இயலா சந்தேகம்
பூக்களுக்குள்ளும் எரிமலையா?
உடைந்து உதிரும் உன் பாதி
பால்பற்கள்
அண்டாா்டிகாவின் உடைந்த பனிப்பாறைகளோ!
சிலுவைக்குள் முளைத்த
சின்னஞ்சிறு சிறகே.
மூங்கில்காட்டிற்கு
அமிழ்தினிய தமிழ் மொழியில்
உள்ளம் கரைய பாட்டிசைத்து
கண்கள் பொழியும் மழைத்துளியால்
கரைந்துருகி நன்றி கூறிடுவேன் இறையவரே.
நறுந்தேனும்,நற் கனியும்,
பொன் மூங்கில் அரிசியும்
கொற்றவரே எமையும் சோ்த்திங்கு
காணிக்கையாய் தருகிறேன்
ஏழிசை நாயகனே ஏற்றிடுவாயே.
பறையாலும்,ஒயிலாலும்
கவியாலும்,இசையாலும்
நன்றி கூற வந்தோமே இறைவா.
அன்பு காட்டி வாழ்ந்திடவும்
அநியாயத்தை விரட்டி ஓட்டிடவும்
அருள் தாரும் எம் அன்பு நாதா.
ஒரு குழந்தை பேசுகிறேன்
என் கண்களை தோண்டிவிட்டு வானத்தை பார்க்கச் சொன்னார்கள்; என் கால்களை உடைத்து விட்டு மான்களோடும் முயல்களோடும் துள்ளி விளையாட அனுமதி தந்தார்கள்; பிறவி ஊமையான அவளிடம் பூக்களைப் பற்றி கேட்டார்கள்; பறவைகளைப் போல் சுதந்திரமாக பறந்து திரிந்து வாழ ஆசை தான்; ஆனால், நாங்கள் கைதியான சிறைச்சாலையில் விடுதலை மட்டும் கானல் நீரானது; பென்சில் பிடிக்க இஷ்டப்பட்ட விரல்களால் கஷ்டப்பட்டு புகையிலைகள் மடிக்கின்றோம்; காயப்பட்ட மூங்கில்கள் ஒரு நாள் புல்லாங்குழலாகிறது; ஆனால், நாங்கள் சுதந்திரமான பூங்காற்றைக் கூட அடிமைத்தனமாய் நுகர்கிறோம்; கல்லும் மண்ணும் இல்லாமல் ஒரு வேளை உணவுண்ண நெடுநாள் ஆசை
பெண்மை ருதுவானது
வரமா?சாபமா?
வரம்தானேயெனில்
ஏன் அந்த மூன்று நாள்
சிறைவாசம்
எங்கள் வீட்டு வெளித்திண்ணையில்.
தன் சாதி சொல்ல
இழிவென்று நினைக்கும்
என் சாதி குடியே
நம் சாதி ஒன்றும்
இழிவானதல்ல
புரிந்துகொள் உனையே
பறை எடுத்து அடித்து
உரிமைகளை மீட்போம்
வா என் கண்ணே!
சாவு ஒலி அல்ல அது
வாழ்வின் முழக்கம் என்று
முழங்கி வா பெண்ணே!
போர் கலையாம் ஒயில்
எடுத்து ஆடி நாமும்
போர் புரிவோம் பெண்ணே!
நம்மை அடக்கி ஆள நினைப்போரை
போர் வாளெடுத்து துரத்துவோம்
எழுந்து வா என் வீரமே!