niki- கருத்துகள்
niki கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [28]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
மிக அருமை.
வரதட்சணை என்கிற பிச்சை எடுக்கும் ஒரு சில கும்பல் வாய் விட்டு கேட்பதில்லை மாறாக தானாகவே கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கிவிட்டு கொடுப்பது கடமை என்ற மாய வலையில் பெண் வீட்டாரை சிக்க வைத்து விடுகின்றனர்.நகையே போடாமல் பெண் வந்தால் ஏற்றுக்கொண்டு விடுமா இச்சமூகம்.உண்மையை உடைத்து சொல்லியிருக்கிறீர்கள்.மிக அருமை.
உறைய வைக்கும் உணர வைக்கும்உண்மை.மிக அருமை தோழர்
நன்றி சோதரா.தமிழ் எனும் அடா் வனத்திற்குள் வார்த்தை தேடி தொலைந்து போக முயல்கிறேன் இன்னும் அதிகமாக உம் முயற்சியைப் பார்த்து கவியே.
உம் அன்பின் ஆழம் கண்டு பத்து சென்ம காயம் என்ன நூறு சென்ம காயங்களைக் கூட சுமந்திடுவாள்.அதுவே தாய்மையின் சிறப்பு.மிக நெகிழ்வான உணர்வு கவிதை.அழகு.
மிக அழகு.திரும்ப செல்ல முடியாத குழவிப்பருவம் எப்போதுமே ஏங்க வைக்கும் சொர்க்கம்.அருமை தோழா.
பெண்கள் உடலால் கற்பழிக்கப்படுவது மட்டுமல்ல அசிங்கமான பார்வைகளாலே ஒரு நாளுக்குள் பல முறை கற்பழிக்கப்படுகிறாள்.பெண்கள் தங்களுக்கு தாங்களே சிறைப்பட்டுக்கொள்ள இச்சமூகம்ஏற்படுத்தும் மறைமுகமான யுக்தி இது.தம்பி
அருமை தம்பி.சுயம் நிறைந்த உலகில் தூக்கி எறியப்படுதல் இயல்பாகிவிட்டது.புறக்கணிப்பின் வலி கொடுமையானது.கவிதைகளால் உலகை மாற்று.உலகின் வலி நிறைந்த மனிதா்களின் உணர்களுக்குள் மூழ்கிப்போய்விடு.சமுத்திரத்தின் ஆழங்களுக்குள் சிறு கண்ணீர்த்துளிகள் காணாமலே போய்விடும்.பதிதாய் பிறப்பெடு.மகிழ்ச்சியாய் வாழ்.உலகத்தை இந்தளவு நேசிக்கும் மானுடத்தின் முது பரிவு கொண்ட உம்மை நினைத்து நான் வியந்து பார்க்கிறேன்.சின்னஞ்சிறு கவியே.
கனவுகளில் கூட கருக்கலைப்புகள் வேண்டாம் தம்பி.
மனிதம் புதைகுழிக்குள் மெல்ல மெல்ல புதைந்து கொண்டிருத்கிறது.மிக மிக எதாா்த்தமான வாழ்வியல் உண்மை. அருமையான கவிதை.
உண்மைதான்நேற்று ஈழ தமிழா்,ரோஹிங்யா முகமதியா்,இன்று சிரியா.இன்னும் எத்தனை?எத்தனை உயிர் பலி
பாா்ப்பணியம் பாய்ந்து தாக்க தயாராகிவிட்டது.அதை எதிா்த்து தாக்க பெரியார் நம்மோடு இல்லை.அவர் கொள்கைகள் உடனிருக்கும் நம்மோடு.அந்த கொள்கையெனும் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வீறு கொண்டு போராடும் தருணம் அவசியம் இப்போது.போராடுவோம் நண்பா.
அழகிய கருத்து
தம்பி கடந்த கால வலிகளில் இருந்து உங்களால் மீள முடிகிறதா? நிகழ்கால ஈழம் எப்படி இருக்கிறது.கேட்டதையும் பார்த்ததையும் கொண்டே பரவிய வலி இன்னும் மறையவில்லை எனக்கு.
அழகான அழுகை தரும் உலகின் அழுக்கை நீக்கும் வரிகள்.வாழ்வை உயிா்ப்புடன் வாழ நினைக்கிறேன்.வறுமையின் தயவில் கனம் தாங்காமல் சிறகுடைந்த பறவையாய் மனம் உடைந்து வாழாமல் வாழ்கிறேன்.மிக அருமை தம்பி.
எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.மனிதமும் ஒரு நாள் புனிதமாகும்.மானுடத் தன்மையடைதலு நோக்கி தினமும் முயற்சிப்போம்.மிக்க நன்றி.
மிக அருமை.
நமக்கான மாற்றத்தை நாமே உருவாக்குவோம்.நமக்காய் புது விதிகளை நாம் எழுதுவோம்.
கதைகளில் காணும் அட்சய பாத்திரம் உண்மையில் நம் உள்ளங்களில் தோன்றினால் பசி அரக்கனுக்கு வேலையேது.மிக அருமை தங்கச்சி.
தங்கச்சி குடும்பத்தை விட்டு,ஊரை விட்டு நாட்டை,இனத்தை,மானத்தை,உணா்வை,
இழக்கின்ற வலிகளை அனுபவிக்க இல்லையென்றாலும் உங்கள் படைப்பால் ஏதோ இனம் புாியா வலி இதயம் எங்கும்வியாபிப்பதை தடுக்க முடியவில்லை.நிச்சயம் தமிழா் நம் மதி கொண்டு மட்டுமே நாடாள்வா்.அப்போது விதைக்கப்பட்ட நம் முன்னோா்கள் புன்னகையால் நம்மை வாழ்த்துவா்.மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.