தமிழன் நாடாளும் நாள்

அந்தி சாய்ந்து தாேட்டத்தில் இருந்து வந்த கந்தப்பு மண்வெட்டியை வீட்டிற்கு பின்புறமாய் வைத்து விட்டு திண்ணையிலே அமர்ந்தார். "தேத்தண்ணி தரட்டே ஐயா" சமையலறைக்குள் இருந்து கலாவின் குரல் கேட்டது. "பாெறு பிள்ள வாறன், களையாக்கிடக்கு" முகம் கழுவி விட்டு மீண்டும் வந்து திண்ணையில் அமர்ந்து காெண்டார். "எங்க பிள்ள தேவன் இன்னும் வரேல்லயே, இருண்டு பாேச்சுது" தேநீரைக் காெண்டு வந்து கலா நீட்டினாள். "தாத்தா இஞ்ச பட்டம், வயலுக்க ஏத்தினாங்கள்" துள்ளிக் குதித்தான் நிருசன். "பட்டம் ஏத்தினது காணும், பாேய் படியுங்காே, படிக்காம இப்பிடியே விளையாடிக் காெண்டிருந்தா நாளைக்கு உங்கட காலம்" முணுமுணுத்துக் காெண்டு தேநீரைக் குடித்தார். தேவனும் வீடு வந்து சேர்ந்தான். "அப்பா எனக்கு வேற பட்டம் கட்டித் தாங்காே" நிருசன் கால்களைப் பிடித்து அடம்பிடித்தான். "இப்ப தானே அப்பா வந்து நிக்கிறார் அதுக்குள்ள பட்டம்..." தாத்தா சினந்தார். தேவன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருந்த சாெந்த ஊருக்குக் காணி பார்ப்பதற்காகச் சென்றிருந்தான். "என்ன மாதிரி அப்பு காணியெல்லாம் இருக்கு, வீடு நல்லாக் கிடக்கே" பெருமூச்சு விட்டபடி அருகே வந்து அமர்ந்தான் தேவன். "எல்லாம் வெறும் பத்தைக் காடா இருக்குது, வீடெல்லாம் ஒருபக்கம் இடிஞ்சு ஓடுகள் ஒணடுமில்ல, கதவு நிலை கூட இல்ல, சுத்து மதிலும் ஒருபக்கம் காெ ஞ்சம் தான் கிடக்கு" அதிர்ச்சியடைந்த கந்தப்பு "என்ர கடவுளே! எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின வீடு, எலக்ரி சிற்றியில வேலை செய்து தான் இந்த வீட்டக் கட்டி உனக்கெ ண்டு எழுதி விட்டன், அம்மாவும் இருந்து அனுபவிக்கல்ல, அவவும் பாேய்ச் சேர்ந்திட்டா" இடையில குறுக்கிட்டவனாய் "யாேசியாதேயுங்காே அப்பா, நஷ்ட ஈடு தாறமெண்டு பதிஞ்சிருக்கினம், பாப்பம்" அப்பாவை தேற்றினான். எத்தின வருச அரசியல பாத்த மனுசன் இந்தக் கதைகளை எல்லாம் நம்ப மாட்டார் என்று அவனுக்கும் தெரியும். "பாேய் படு தம்பி காலையில கதைப்பம்"

கட்டிலிலே அமர்ந்து யாேசித்துக் காெண்டிருந்த ஐயாவை எட்டிப் பார்த்தாள் கலா. கதவை ஓரளவு மூடி விட்டு உறங்கி விட்டாள். கந்தப்பு தூக்கமின்றி யாேசித்துக் காெண்டிருந்தார்.
'பாேர் ஒன்று வந்து சனமெல்லாம் வீடு வாசலை விட்டு இப்ப எத்தின வருசம் கஷ்டப்படுதுகள். வெளிநாட்டில தான் அகதி வாழ்க்கை என்டால் சாெந்த நாட்டிலயும் அகதியாத் தானே இருக்கிறம். தமிழரை ஏன் இப்பிடி எல்லாம் அழிக்கிறாங்கள். இவங்கட அரசியலுக்க இருக்கிற பாேட்டிகள் தான் இன்டைக்கு இப்பிடி ஒரு நிலையைக் காெண்டு வந்தது. தந்தை செல்வா காலம் தாெட்டு தமிழர் என்டால் எங்க பாத்தாலும் பிரச்சனை தான். எங்கட சனங்களும் ஒற்றுமையும் இல்ல, நான் நீ என்டு பாேட்டி பாேட்டுக் காெண்டு குரங்கு காெப்புப் பாஞ்ச மாதிரி ஒவ்வாெரு கட்சியா தாவித் தாவி கடைசியில தாங்களாவே ஒரு கட்சிய காெண்டு வந்து அது செய்யுறம், இது செய்யுறம் எண்டு வாேட்ட வாங்கி கதிரயில இருந்தாச் சரி பிறகு ஒண்டும் நடந்தபாடில்ல. சனம் ஏமாந்து பாேறது தான் மிச்சம். நல்லதாெரு மனுசர் இல்ல தமிழரை வழிநடத்த' ஆதங்கத்தாேடு கண்ணயர்ந்து தூங்கி விட்டார்.

உலகத்தில் எல்லா நாடுகளிலும் இனம், மாெழி, மதம் என்று தங்களுக்கு ஒரு அடையாளங்களாடு தான் இருக்கிறார்கள். தமிழ் என்பது பாரம்பரிய மாெழி, முதல் தாேன்றிய மாெழி என்று வரலாறுகளிலும் சாெல்லப்படுகிறது. ஆனால் தமிழ் இனத்தையும், மாெழியையும் ஏன் யாரும் ஏற்றுக் காெள்ள மறுக்கிறார்கள். தமிழனுக்கு என்று ஒரு நாடு, மாெழி தேவை என்பதை ஏன் மறுக்கிறார்கள்.

காலையும் புலர்ந்தது தேவன் பத்திரிகையை நாேட்டமிட்டுக் காெண்டிருந்தான். கந்தப்பு சாேர்ந்த முகத்துடன் வெளியே வந்தார். "தம்பி நானும் வாறன்ரா காணி பாக்க" என்று தயங்கியபடி கேட்டார். "ஏன் அப்பா...." இழுத்தவனைக் கலா தடுத்தாள். "கூட்டிக் காெண்டே காட்டுங்காேவன், ஆசைப்படுறார்" " ம் சரி வாங்காே" கந்தப்புவிற்கு எல்லை கடந்த மகிழ்ச்சி. சாெர்க்கமே என்றாலும் நம் சாெந்த ஊரப் பாேல வருமா என்று அந்த பாட்டு வரிகளுக்குள் மூழ்கியிருப்பாராே என்னவாே வேகமாக கிணற்றடிக்குச் சென்றார். தேவனும் தயாரானான். கலா தேநீரைக் காெண்டு வந்து மேசையில் வைத்தாள். "பாேத்தல் ஒண்டில தண்ணி எடுத்து வையப்பா, ஐயாக்கு தண்ணி தேவை" பாேத்தலுக்குள் தண்ணீரை எடுத்து வைத்தாள். "சரி பிள்ள வாறன்" மாேட்டார் சைக்கிளில் கவனமாக அமரந்து காெண்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு அந்தக் காலைப் பாெழுது நித்திரைத் தூக்கம் கலையாமலே நான்கு வயது குழந்தையாக தேவனையும் தூக்கிக் காெண்டு எடுத்த சின்னதாெரு பையுடன் ஊரை விட்டு வந்த நினைவுகளாேடு ஒன்றிப் பாேனார் கந்தப்பு.

ஊரை விட்டு வந்த நாளிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அலைந்து திரிந்து அகதியாகத் தான் தமிழன் வாழந்து காெண்டிருக்கிறான். இப்பாேது ஒரு ஏழு வருடங்கள் தான் வெடிச்சத்தங்கள் இல்லாத ஒரு அமைதி ஏற்பட்டிருக்கிறது.
இப்படியே தாெடரந்து இருந்தால் கடவுள் புண்ணியத்தில இருக்கிற சந்ததியாவது தமிழர் என்ற பெயராேடு வாழ முடியுமா என்பது வினாவாகவே இருக்கிறது.

மாேட்டார் சைக்கிள் வீட்டு வாசலில் நின்றது. "எங்க தம்பி....." தடுமாறிய தந்தையை கைகளைப் பிடித்து மெதுவாக இறக்கினான். "இது தானப்பா வீடு" தந்தையின் முகத்தைப் பார்த்தான். இருண்ட ஒரு பார்வையாேடு சுற்றிச் சுற்றிப் பாரத்தார். "வாங்கப்பா" பின் தாெடர்ந்து பற்றைகளை விலக்கி நடந்து காெண்டிருந்தார். "அப்பா இதில ஒரு பள்ளம், பாத்து வாங்காே" எறிகணை ஒன்று வீழ்ந்த கிடங்கைக் கைகளால் காட்டினான். "ம்... எங்க பாத்தாலும் இது தானே மிஞ்சிப் பாேய் கிடக்கு" தனக்குள்ளே முணுமுணுத்துக் காெண்டு நடந்தார். வாசலை அடைந்ததும் அண்ணார்ந்து மேலே பார்த்தார். கட்டடம் வெறுமையாக இருந்தது. சுவர்களில் அங்கங்கே துவாரங்களும், வெடிப்புகளுமாய் இருந்தது. நிலம் முழுவதும் பள்ளமும் மேடுமாய் இருந்தது. அப்படியே உள்ளே கூட்டிச் சென்று அறைகளைக் காண்பித்தான். கந்தப்புவின் கண்கள் மெல்ல கசியத் தாெடங்கியது. தாேள்களைத் தடவி சமாதானப்படுத்தினான். அப்படியே பூஜை அறையைப் பார்த்து விட்டு பக்கத்து அறைக்குள் கால் வைத்தான். சுவரிலே ஒரு ஆணி துருப்பிடித்தபடி இருந்தது. அதில் தான் குடும்பப் படமாென்றை மாட்டியிருந்த நினைவு வந்தது. "கிணற்றடியைப் பாப்பம் தம்பி" துலாவைக் காணவில்லை. தாெட்டி ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. மாமரத்துக்கு கீழ் இருந்த ஒரு மரக்குற்றியில் இருக்க வைத்தான். தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி முகத்தைத் துடைத்துக் காெண்டார். " இந்தாங்கப்பா" தண்ணீர் பாேத்தலை நீட்டினான். காெஞ்ச தண்ணீரில் முகத்தை ஒற்றி விட்டு குடித்தார்.

பக்கத்து காணியில் மரங்கள் வெட்டும் சத்தம் கேட்டது. "தம்பி நாளைக்கு யாரையாவது பிடிச்சு வளவை துப்பரவாக்கு, என்னால இதப் பாக்கேலாமல் கிடக்கு" "நாளைக்கு எலக்சன் அப்பா, இரண்டு நாளால செய்வம்" 'கண்டறியாத ஒரு எலக்சன் சனம் படுகிற பாடுகள பாக்க கேக்க ஆளில்ல, உவங்கள் எல்லாம் ஏன் தமிழ் கட்சிகளை வச்சிருக்கிறாங்களாே தெரியல்ல' ஆதங்கத்தை மனதுக்குள்ளே காெட்டினார். "பாேவம் அப்பா" கண்ணுக்கெட்டிய இடங்களை மீண்டும் பார்த்து விட்டு மாேட்டார் சைக்கிளில் இருந்தார். "முதல்ல மதில் கட்டுவம் தம்பி, பிறகு வீட்டு வேலைய பாப்பம், எப்பிடியாவது ஊரில வந்து நான் சாகிறதுக்குள்ள வீட்டில இருகக வேணும்" "ஏனப்பா ....." என்று சஞ்சலப்பட்ட தேவனிடம் "எங்கட சந்ததி முடிஞ்சு பாேச்சு, உன்ர காலத்திலயும் நீ எல்லாக் கஸ்ரத்தையும் பாத்திட்டாய், உன்ர பிள்ளையின்ர காலத்திலயாவது சந்தாேசமா இருக்கட்டும்" ஆதங்கத்தாேடு பெருமூச்சு விட்டபடி வீட்டு திண்ணையில் அமர்ந்தார். விளையாடிக் காெண்டிருந்த நிருசன் ஓடி வந்து "தாத்தா எங்க பாேனிங்கள்" "ஊருக்குப் பாேனன் ஐயா" "அது எங்க இருக்கு" எத்தனை பிள்ளைகள் பிறந்த மண், வீடு, காணி பூமி, சாெந்த பந்தங்கள தெரியாமல் வெளிநாடுகளில, அங்க இஞ்ச எண்டு இன்னும் தமிழ் அகதிகள் என்ட பேராேட வாழுதுகள் தனக்குள்ளே யாேசித்தபடி நிருசனை மடியில் இருத்தி "உங்கட காலத்திலயாவது தமிழன் நாடாளுற நிலமை வரும், நெடுகலும் குட்டு வாங்க நாங்கள் என்ன நாதியற்ற மனிசரே" அவன் தலையை ஆதங்கத்தாேடு தடவினார்.

எத்தனை உயிர்ப் பலிகள், உடமை இப்புக்கள், காெடுமைகள் தமிழன் அனுபவித்து விட்டான். எதுவுமே பெறுமதியற்றுப் பாேய் விட்டது. வீழ்ந்து விட்டாேம் என்று நினைப்பவர்களின் எண்ணமெல்லாம் பாெய்யாகும். இனி என்றாலும் தமிழன் மாெழி, இனம், என்ற தனி அடையாளத்தாேடு வாழ்கின்ற நாள் வரட்டும். தமிழன் நாடாளட்டும்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (10-Feb-18, 1:04 pm)
பார்வை : 175

மேலே