நன்றி

அமிழ்தினிய தமிழ் மொழியில்
உள்ளம் கரைய பாட்டிசைத்து
கண்கள் பொழியும் மழைத்துளியால்
கரைந்துருகி நன்றி கூறிடுவேன் இறையவரே.
நறுந்தேனும்,நற் கனியும்,
பொன் மூங்கில் அரிசியும்
கொற்றவரே எமையும் சோ்த்திங்கு
காணிக்கையாய் தருகிறேன்
ஏழிசை நாயகனே ஏற்றிடுவாயே.
பறையாலும்,ஒயிலாலும்
கவியாலும்,இசையாலும்
நன்றி கூற வந்தோமே இறைவா.
அன்பு காட்டி வாழ்ந்திடவும்
அநியாயத்தை விரட்டி ஓட்டிடவும்
அருள் தாரும் எம் அன்பு நாதா.