காதல் முகம்
மங்களமாய் உன் முகத்தில் பூசிய மஞ்சள் கண்டு
மஞ்சள் காமாலை வந்தது போல எங்கும் மஞ்சளாய் தோன்றியது!
உன் வதனம் மோதிஏமாந்து திரும்பியதே
மலர் தேடிய வண்டினங்கள்🐝🐝🐝
புதினம் ஒன்று படைத்து விட்டேன்
படித்தே அறியாத என் அறிவால்📖📖
கடினம் என்றே தோன்றிய உன் இதயம், உடனே இளகும் மெழுகாய் இருக்கிறதே!💕
இரும்பாய் இருப்பாய் என்றிருந்தேன்
கரும்பாய், குறும்பாய் இருப்பது என் வரமே!💞
வெறுப்பாய் விரட்டுவாய் என நினைக்கையில், பொறுப்பாய், விருப்பாய் காதல் சொன்னாயே💟
உன் காதல் முகம் பார்த்தே வாழ் நாள் முடித்து உயிர் கடத்திடுவேன் நான் 👨❤💋👨👩❤💋👩