நீ எனையெழுது

உன் விழிகளில் என் விதியெழுது
உன் விரல்களில் என் மதியெழுது
என் இதயத்தில் உன் கவியெழுது
என் இரத்தத்தில் உன் உணர்வெழுது
என் மேனியில் உன் கதையெழுது
வான் மேகத்தில் நம் காதலெழுது
உன் உயிரில் என் உயிரெழுது
உன் உயிருள்ளவரை நீ எனையெழுது !...