மனிதம் ---முஹம்மத் ஸர்பான்

மெழுகு நதியில்
ராந்தல் படகு
பனிமலையாய்
என் கண்களில்
நீந்திப் போகிறது
காட்டு மூங்கில்
காமன் ஒருவனின்
இச்சைக்காய்
விலை மகளை
தேடிப் போகிறது
கூரைகளுக்குள்
ஒளிந்து வாழும்
யுகப் புறாவும்
தன் அந்தரங்க
வாழ்க்கையில்
யுத்தம் புரிகிறது
பிச்சைத் தட்டில்
குருடர்களின்
பரிதாப ஏக்கப்
பார்வைகள்
சில்லறையாகிறது
நகக் கீறல்களால்
பூக்களின் உடல்கள்
விபச்சாரங்களில்
அடமானமாகின்றன
உலகம் நரகம்
போல் மாறியது
மனிதம் குப்பை
போல் மனதில்
நாறிக் கிடக்கிறது