ஊசலாட்டம்
அங்குட்டும் போக முடியல..
இங்குட்டும் போக முடியல..
இக்கொடிய சமுதாயத்தில நம் வாழ்க்கை இன்னும் விடியல...
ஏதேதோ சட்டங்கள்,
மண்ணாங்கட்டி திட்டங்கள்,
உருப்படாத சமுதாயம்,
நாடு, வீடெல்லாம் உருவம் தந்து பகைமையைத் தூண்டி பக்குவமாய் நகர்கிறது பாழும் மனிதர்களின் கூட்டம்...
பணமில்லாதவனுக்கு பணத்தை பெற வேண்டுமென்ற போராட்டம்.
பணத்தைப் பெற்றவனுக்கு அதை பாதுகாக்கவும் மேலும் பெருக்கவும் வேண்டுமென்ற போராட்டம்...
சொந்தங்களில்லாதவனுக்கு சொந்தங்களைப் பெற வேண்டுமென்ற போராட்டம்...
சொந்தங்கள் சூழ வாழ்பவனுக்கு சொந்தங்கள் பிரிந்து சென்றுவிடக் கூடாதென்ற போராட்டம்...
இருப்பதைத் தக்கவைத்துக் கொள்வதற்கும்,
இழப்பதற்கும் இடையே சந்தேகமென்ற போராட்டம்...
இதுவே வாழ்வின் தொடர் ஊசலாட்டம்...
சமநிலையென்ற ஒன்றை உணர்ந்து கடைபிடிக்கும் உத்தமமான ஞானம் பெற்ற ஒருவரையும் காணவில்லையே என்றே எனக்குள்ளும் ஒரு போராட்டம்...
சத்தியம் மறந்து வாழ்வில் சாத்தியமானதையெல்லாம் நன்மை, தீமையென்ற பகுத்தறிவில்லாமல் செய்யத் தூண்டும் அறிவும் மடமை தானே...
காலம் போதிக்கும் அனுபவ உண்மையறிவு...
அதைப் பெற்றும் திருந்தாதவர்கள் தான் வாழ்வில் வீணர்களாகவே போராடுகிறார்கள்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
