முதுகில் தொட்டில் நானாக --- முஹம்மத் ஸர்பான்

நீருண்டு காற்றுண்டு - நான்
வாழ நிலமாக நீயுண்டு
செல்கள் எங்கும் ஜீவன் ஓட
கருவில் நிலவு வளரும்
பத்துத் திங்கள் கடிகாரமாய்
நீயே தேய்ந்து போனாய்
பத்து ஜென்ம காயம் வாங்கி
பிரசவம் கடந்து வந்தாய்
மார்பின் ஆயுள் கடிதங்களை
அன்னமாக அருந்தினேன்
சிந்தும் தின்ம திரவக்கழிவை
கரங்களால் அள்ளிடுவாள்
அவள் பாதங்களில் சுவர்க்கம்
ஓடிப் பிடித்து விளையாட
முத்துக்கள் போல் முத்தப்பனி
உயிர் எங்கும் உறைந்திடும்
நெய்ச் சோறு சமைத்து வெச்சி
வயிறு நிரம்ப ஊட்டிடுவாள்
முடவனாக என் விதி போச்சே
மூச்சு முட்ட சுமந்திடுவாள்
படி தாண்ட முடியாம தவிக்க
தோளோடு தூக்கி போவாள்
செங்கல் தூக்க என் தாய் போக
முதுகில் தொட்டில் நானாக

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-Mar-18, 6:06 pm)
பார்வை : 481

மேலே