தமிழன்!!!

அறிவியலின் முன்னோடி!!

எம்மொழிக்காரனுக்கும்,
பூர்வீகம் வேற்றுமொழி,
என் தமிழனுக்கு மட்டுமே,
தன் மொழியே பூர்வீகம்!!

கலைகள் அறுபதினாங்கினையும்,
கற்றுத் தந்தவன் என் தமிழன்,
பூஜ்யம் என்றொரு எண்ணிருப்பதை,
ஊருக்கு அறிவித்தவன் என் தமிழன்!!

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்,
என் வள்ளுவனைப் போல் எவனுண்டு?
காப்பியப் பொருளை குறிப்பால் உணர்த்த,
என் கம்பனைப் போல யாருண்டு?

உலகப் பொதுமறை திருக்குறள் தமிழே,
உயிருக்கு உயிரூட்டும் சீவக சிந்தாமணி தமிழே,
கற்பினை உலகுக்குணர்த்திய சிலப்பதிகாரம் தமிழே,
கேட்போரை மெய்மறக்கச் செய்யும் மணிமேகலை தமிழே!!!

இங்கு ஷேக்ஸ்பியர்கள் ஆயிரம்,
இலக்கியத்தை சுவாசித்தவர்கள் பல்லாயிரம்,
சிற்ப்பங்கள் செதுக்குவதிலும், சித்திரங்கள் படைப்பதிலும்,
உலகின் முன்னோடியல்லவா தமிழன்!!!

வீரத்தமிழன், வெற்றித்தமிழன்,
உலகத்தமிழன், செம்மைத்தமிழன்,
என்றெல்லாம் போற்றப்பட்டவன்,
இன்று ஈழத்தமிழனாய் செத்து மடிகிறான்!!!

தமிழனே இல்லாதபோது,
தமிழுக்கு ஏனய்யா செம்மொழி அந்தஸ்து?
கல்வெட்டு மொழியாக தமிழை புதைத்து,
அதன் கல்லறையில் எழுதவா செம்மொழி என்று?

தமிழ் மூசென்று மேடையில் முழங்குகிறான்,
தன் பிள்ளையை கான்வென்டில் சேர்க்கும் பணத்தேவைக்காக!!
எங்கே செல்கிறான் தமிழன்?

போர்முனைக்கு பெற்ற பிள்ளையை அனுப்பியது அன்று!
பிள்ளையின் பதவிக்காக போரை உருவாக்குகிறான் இன்று!
எங்கே செல்கிறான் தமிழன்?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றான் அன்று!
பெட்டியை திறப்பின் குற்றமென்ன குற்றம் என்கிறான் இன்று!!
எங்கே செல்கிறான் தமிழன்?

சொந்தங்களுக்காக பணம் சேர்த்தான் அன்று!!
பணத்திற்காக சொந்தம் சேர்க்கிறான் இன்று!!
எங்கே செல்கிறான் தமிழன்?

இனி ஒரு விதி செய்வோம்!
தமிழ் மொழியை தாயைப்போல காப்போம்!
ஐயஹோ! என் செய்வேன்?
தாயையே காட்டிக் கொடுப்பவனாக மாறிவிட்டானே தமிழன்!!!

எழுதியவர் : குச்சிமிட்டாய் (15-May-12, 3:21 pm)
பார்வை : 368

மேலே