தீப்பேறு....!
தகளிகள் தகிப்பதில்லை...
தாமன் குளிர்ப்பதில்லை.....
துனைவென வரும் தீப்பேறு
மந்த மா மானுடத்தின்
சிந்தையில்லா
சேய் நோக்கி விந்தை
செய்யும்
வெறுங்கூச்சல்........
பேறென பெறுவதற்காய்
வாழ்விதன் தாற்பரியம்
புரிபடா பூவுலகின்
வடக்குப் பிரயாணத்தின்
தெற்குப் பொன்குவியல்.....
அடிக்கடியில் அருவுருவில்
ஆயிரத்தில் விடையிருந்தும்
சிரங்கொண்ட சில கேள்வி
உன்னை வாழ்வுழுத
தொம்பலேயாம்......
தெற்றென தேறுமில்லா
உற்றென ஊறுகொண்டு
பற்றிலை என்றே
பாசாங்கோடு
சிகை வளர்க்கும்
சிறுவர்களா.......
துஞ்சவும் துய்க்கவும்
என்றால்
உற்றவை கோடியிருக்க
பற்றிலை என்னுமோர்
பற்றினைக் கொண்டு
சாவேன்???