அலைகள்
ஓடும் காலங்கள் ஒவோன்றாய் கழிய...
தினம்,
பகலவன் இருளில் ஒழிய,
ஒளிரும் பகல் படர்ந்தும்,
குளிரும் இரவும் அடர்ந்தும்,
ஓயவில்லை இவன் வேலைகள்....
அலைமகள் அழைக்கும் ஓசை,
கலைமகள் வீணை மீட்டும் இசையோ...
உன் சுவடுகள் சற்று முன் செதுக்கிற்றாய்,
கரையில்....
பின் அதை அழித்து,
தவிடுகள் என சிதைதிற்றாய்,
உன் மறு அலையில்....
ஆழ் கடல் தோன்றி மாய்வாய்,
என்பதனாலோ....
ஏழ் கடல் இருந்தும்,
கால் கழுவும் கரையில் பிறந்தாய்....
உன், இளமை கொண்டு அடித்த போதும்,
முதுமை பிரள தழுவிய போதும்,
தகர்க்க முடியாது,
எம் கரையை......
இரவும் பகலும் சுழன்றும்,
நாளும் பொழுதும் அடித்தும்,
அலையே....
உன்னை கரையைக் கரைக்க முடியாதே...
உன் வெள்ளை நிற நிறைகளைக் கொண்டு,
அழகில்...
கொள்ளை கொண்டாய் கரைகளை இன்று...
குத்தகை எதுவும் கொடுக்காமல்,
கரையில் வித்தைகள் பல செய்து நீ தங்க....
நேசம் கொண்ட கரையை இன்று,
மோசம் செய்து சென்றாய் நீ...
அவன் இசைவு இன்றி,
தினம் வந்து சென்றாய்,
எம் கரையில்....
ரணம் வைத்துச் சென்றாய்,
அவன் மனதில்.....