தாய்மை
உன் கருவறையில் நான் .
இனிமையான இசை ..
தினமும் திருக்குறள்..
அறிவுசார் புத்தகங்கள் ..
ஆனந்தத்தில் நான் ..
என் விழிப்பில் -
உன் உறக்கம் தொலைந்து
என் உறக்கத்தில்
நீ உன்னை மறந்து .
என் படிப்பினில்
நீ விழித்து ...
என் பசி அறிந்து..
உன் பசி மறந்து ..
தட்டுடன் பின் -
உன் அன்பையே அள்ளி தர .
என் பின் அலைவாயே .
என்னுடைய எல்லா வம்புகளையும்
ரசித்து பார்ப்பாயே ..
நான் செய்யும் தவறுக்கெல்லாம் ..
நீ தண்டனை ஏற்பாயே .
என்னை உனதன்பு காட்டி
மாற்றுவாயே ஒரு நொடியில்
அனைத்தையும் கற்று தந்தாயே
உன் கண்ணுக்குள் வைத்தாயே -உன்னை
கவனிக்க மறந்தாயே .
இந்த மண் மேல நீ இருந்து .
நான் பிறக்க ..
இன்று நீ இறந்து
நான் இறக்க ஒரு வழி
சொல்லேன் ....
என்னை தனியே
விட்டு செல்கிறாயே
கண் மூடி துயில்கிறாயே.
கால சக்கரத்தில்-என்
தாய்மையில் உன் -தாய்மையின்
அற்புதத்தை நொடியில் -உணர
செய்து விட்டாயே .