சின்னத் தோழி என் செல்லத் தோழி

ஆற்றோரக் கரை தழுவும் அழகிய நதியலைகளில்
சேற்றோடு கையளைந்து சின்னச் சின்ன வீடுகட்டி
காற்றோடு கைகோர்த்து நிலா பாட்டுப் பாடிய நாட்கள்
நேற்றோடு போன சொப்பனமோ சொல் என் சின்னத் தோழி !
நெஞ்ச நதிக்கரை நினைவலைகளில் பிஞ்சுக் கரம் காட்டி இன்னும் ஓடிவருகிறாய்
பஞ்சுச் சிகையுடன் என் வயதை மறந்து உன்னைப் பார்த்திருக்கிறேன் என் செல்லத்தோழி !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-18, 7:15 pm)
பார்வை : 87

மேலே