ஒரு விதவையின் விண்ணப்பம்

பட்டுடுத்தி அலங்கரித்து தங்கம் ஜாெலிக்க
மணவாளன் கரம் பற்றி
வேதங்கள் சாென்னபடி
இணைத்து வைத்த பந்தம்
இல்லறத்தில் இனணந்து
இன்பமாய் வாழ கூடி வந்த சாெந்தம்

கால நதியின் ஓட்டத்தில்
நீள நடக்கும் வாழ்க்கை பயணமதில்
முட்களும் உண்டு மலர்களும் உண்டு

விதியின் விளையாட்டில்
தாலிகளும் பறி பாேக
வேலிகளைப் பாேட்டு
சட்டம் எழுதுகிறது சமூகம்

பாெட்டை அழித்து பூவைப் பறித்து
கூந்தலைக் கலைத்து தாலியைக் கழற்றி
கட்டி வைக்கிறது கலாச்சாரம்

முழு வியளம் சரியில்லை என்று
முகம் சுளிக்கின்றனர்
காெண்டாட்டங்களில் பின் வரிசை
காட்டுகிறார்
உறவுகள் வாசல் வந்தால்
ஊர் வம்பு பேசுகிறார்
நன்றாக உடை உடுத்தால்
என்னவாே சாெல்லுகிறார்

நாம் என்ன பாவம் செய்தாேம்
காலனவன் காெடுத்த காலம்
எம் தலையிலா எழுதுவது
கனவுகளில் விழித்தாலும்
இருட்டாகவே இருக்கிறது
வெள்ளாடையும் வெறும் நெற்றியும்
கூடவே எமக்கென்று
எழுதி விட்டதா சாஸ்திரம் .....

எழுதியவர் : அபி றாெஸ்னி (6-Feb-18, 5:56 pm)
பார்வை : 78

மேலே