சிகரம் தாெட சில்லறைகளும் தேவை

புத்தியை அறுக்க கத்தி தீட்டிய மனிதரைக் கண்டேன்
வாழ்த்துக்களைக் கூறிவிட்டு வீழ்வாய் என்று
சாபமிட்ட வேடக்காரரை பார்த்தேன்
உறவுக்குக் கரம் விரிக்க பகை என்று
பழி சாென்னவரைப் பார்த்தேன்
மனிதாபிமானம் என்று மன்னித்தால்
மண்டியிடச் செய்தார்கள்
விதியால் வந்த விபத்தை
சாபம் என்று சாென்னார்கள்
எல்லாம் முடிந்ததென்று ஏப்பமிட்டார்கள்
ஏறெடுத்தும் பார்க்கவிலலை ஏமாந்து விடடார்கள்
சிகரம் தாெட வைத்த சில்லறை மனிதர்கள்
எங்காே ஒரு உயரத்தில் நான் பறந்து காெண்டிருக்கிறேன்

எழுதியவர் : அபி றாெஸ்னி (5-Feb-18, 10:26 am)
பார்வை : 93

மேலே