நியாப்படுத்தப்பட்ட கொடுமை
![](https://eluthu.com/images/loading.gif)
பல கொடுமைகளை வேரோடு
சாய்த்தார்கள் அறிஞர்கள் .....
சில கொடுமைகளை நாகரிக
வளர்ச்சியால் மனிதனே
உணர்ந்து திருந்தினான்.....
இன்னும் பல கொடுமைகள்
கொஞ்சம் குறைந்துள்ளது
இன்னும் சில கொடுமைகள்
முடி மறைத்து நடந்த வண்ணமே உள்ளது .....
ஆனால்
ஒரு கொடுமை மட்டும் அன்றிருந்தது
போலவே இன்றும் தொடர்க்கிறதே ..................................
எந்த மாற்றமுமில்லை ......முன்னேற்றமுமில்லை .......
அதை செய்ய வெக்கப்படுவதுமில்லை ......
தவறென்று உணர்வதுமில்லை .....
இதை நியாயப்படுத்த ஊரில்
நாலு பேருமுண்டு ......
"இது தான் முறை " என்று சொல்ல
மூடநம்பிக்கையில் மூழ்கிய பலருண்டு ....
அதை தடுக்க சட்டமுமுண்டு
அதை யாரும் சட்டை செய்வதில்லை ...
இக்கொடுமையை கௌரவப்படுத்த ....
ஆன்றோர் சூட்டிச்சென்ற
அழகான பெயர் தான்
""வரதட்சணை "''