குப்பைதொட்டியும் நானும்
எண்ணங்களின் ஒவ்வாமையை
யாருடன் பகிர்வது?
காகிதத்தோடு
உரையாடி
கிறுக்கல்களில் முடித்து
கிழித்து வீசினால்
குப்பை தொட்டியும் சிரிக்கிறது
என்னால் மட்டும்
ஏற்றுக்கொள்ள முடியுமாயென..?
ஒருவேளை அதற்க்கும்
மனமிருந்தால்...?
சிலர் காதலெனும்
கிறுக்கல்கள் செய்து
சிசுக்களை வீசுகிறார்
என்னிடம் என்ன
கருப்பையா இருக்கிறது..?
சிலர் விருந்தென்னும்
கிறுக்குத்தனம் செய்து
உணவுகளை வீசுகிறார்
வயிற்றுக்கு நான்
எங்கே போவேன்..?
இல்லையென பலரிருக்க
அவர்களிடம் சுரண்டியதையே
என் மேல் வீசுகிறார்
சட்டத்திற்கு பயந்து
பிறகு எடுத்துகொள்ளலாமென
பாவங்களை நான்
எப்படி தொலைப்பது...?
ஒருவனது குப்பை
அடுத்தவனுக்கு செல்வம்
என்னால் பலர் வாழ்கிறார்கள்
உன்னால்..?
நீ காகிதத்தை தானே
வீசுகின்றாய்
வீசிவிட்டு போ..!
என் ஒவ்வாமைகள்
என்னோடு...

