குரங்கணி

ஒரு நெருப்பு வளையம் – சிலருக்கு
மலர் வளையம் ஆனது.

மலை ஏற்றம் - பெரும்பயணம்.
பெரும்பயணமாகவே முடிந்து விட்டது.

வீட்டில் போய்வருகிறேன் என்று
சொல்லி வந்தவர்கள்.
வர முடியாமல்
ஒரேயடியாய் போய்விட்டார்கள்.

காட்டுத்தீ
மரங்களால் மட்டுமல்ல
மனிதர்களாலும் எரிந்தது.

எல்லோரும் கடைசியில்
நெருப்பில் தான் எரிய வேண்டும்.
அதற்காக உயிரோடேயாவா?

அசாத்தியத் துணிச்சலா?
அசட்டுத் துணிச்சலா?

எழுதியவர் : கனவுதாசன் (17-Mar-18, 2:22 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 47

மேலே