உங்களைத் தான்

திரும்பத் திரும்ப
உங்களை அடிக்க வேண்டி இருக்கிறது.
திரும்பத் திரும்ப
உங்கள் பொய்கள், புரட்டால்.

எங்கள் விடியல் வானத்துக்கு
மேகத் தடையாய் நீங்கள்
எங்கள் பயணத்துக்கு
வேகத்தடையாய் நீங்கள்.

பேராசைப் பெருநோய்
பீடித்து
உங்கள் கரங்கள்
அழுகிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் பொய் வீச்சத்தில்
உங்கள் வாய்நாற்றம்
சகிக்க முடியவில்லை.

சிறைக்கைதிகள் சிலரை
வெளியே விட வேண்டியிருக்கிறது.
சிறைக் கதவுகள்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

குறைந்த பட்சம்
செத்துப் போங்கள்.

எழுதியவர் : கனவுதாசன் (17-Mar-18, 2:24 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : ungalaith thaan
பார்வை : 96

மேலே