அவள் ஆட்டம்

வஞ்சிக்கொடி இடையாள்
அவள் அரங்கத்தில் வந்தாள்
ஆடலழகி அவள் ஆட
மின்னொளி அரங்கத்தை நிரப்ப
ஆடும் மயில் அவள் துள்ளித் துள்ளி
ஆட மின்னல்கொடியானாள்
சிவ தாண்டவத்திற்கு சவாலாய்
அமைந்தது சக்தியின் ஆடலது
ஆடல் கலையே ஆடியது
அவையோரும் சற்றே மெய்மறந்து
ஆடலில் ஒன்றாய் ஒன்றிப்போக
சக்தி சிவனை வென்றாள்
அரங்கமே சபையோரின்
இடியாம் கரகோஷத்தில் அதிர்ந்தது
திரை மூடியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-18, 9:32 am)
Tanglish : aval aattam
பார்வை : 4145

மேலே