உனையே அறிவாய்
தன் சாதி சொல்ல
இழிவென்று நினைக்கும்
என் சாதி குடியே
நம் சாதி ஒன்றும்
இழிவானதல்ல
புரிந்துகொள் உனையே
பறை எடுத்து அடித்து
உரிமைகளை மீட்போம்
வா என் கண்ணே!
சாவு ஒலி அல்ல அது
வாழ்வின் முழக்கம் என்று
முழங்கி வா பெண்ணே!
போர் கலையாம் ஒயில்
எடுத்து ஆடி நாமும்
போர் புரிவோம் பெண்ணே!
நம்மை அடக்கி ஆள நினைப்போரை
போர் வாளெடுத்து துரத்துவோம்
எழுந்து வா என் வீரமே!