Harish Radha - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : Harish Radha |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 02-Feb-2018 |
| பார்த்தவர்கள் | : 62 |
| புள்ளி | : 9 |
நாநூறு ஆண்டுகள் ஆண்ட வெள்ளையனை
நாட்பது ஆண்டு தியாகத்தால் வென்றது காந்தியம்..
அடிமையாய் நடத்திய ஆங்கிலேயனை
அடிபணிய வைத்தது காந்தியம்..
காந்தி காந்தியத்தின் தொடக்கமே.
முடிவல்ல..
செயலாய் இருந்த காந்தியத்தை கொள்கையாய் மட்டுமே மாற்றியது அரசியல்..
உயிரை கொல்லாமல் ஆட்சி செய்வது மட்டுமே காந்தியம் அல்ல.
ஊழலயும் கொள்ளாமல் ஆட்சி செய்வதும் காந்தியமே..
ஆயுதம் கொண்டு ஆட்களை வீழ்த்தும் உலகில்...
அஹிம்சை கொண்டு ஆயுதம் வெல்லவும் காந்தியத்தில் எப்பொழுதும் சாத்தியமே!!!
மகிழ்ச்சியில் மாணவன் மறைவாய் தேடினான் !
இழைப்பாறும் இழைஞன் மோகத்தில் தேடினான்!
மனைவி வீடு சென்ற கணவன் இன்பத்தில் தேடினான்!
காதலை இழந்த காதலன் கண்மணி நினைவாய் தேடினான்!
உடல் உழைக்கும் உழைப்ப்பாளி வலியை மறைக்க தேடினான்!
இன்பத்தில் தேடினான்
துன்பத்தில் தேடினான்
கவலையில் தேடினான்
நினைவில் தேடினான்
வலியில் தேடினான்
வருத்தத்தில் தேடினான்
வறுமையிலும் தேடினான்...
தேடும் மது நான் ...
மனதிற்கு துணையாவதும்
மரணத்திற்கு துணையாவதும் தேடுபவன் கையில்...
காதல் நிறைந்த விழிகளில் கண்ணீர் நிறைந்தது....
பிரிவு காதலர்களுக்கிடையே தான்....
காதலில் அல்ல...
விதியால் என்னோடு பயணிக்காத உன்னை விட்டு செல்ல இன்னும் என் மனம் தயாராகவில்லை...
வாழ்கிறாய் என்றும் என்னுடன்...
என் கவிதை வரிகளாய்...
செவிகள் இரண்டிலும் ஒலி ஒலித்தும்!
விழிகள் இரண்டிலும் பார்வை தெரிந்தும்!
உதடுகள் வழியே வார்த்தைகள் வழிந்தும்!
பிணமாய் வாழும் தருணம்.......
காதல் தோல்வி!!!!!
பருவத்தின் தாகமே தீர்ந்தது அவள் பார்வையில்!
சந்திப்புகள் அரிதே எனினும், காற்றலையிலே உயிர்கொண்டோம்..
கனவுகள் உயர்ந்தன நினைவுகள் வளர்ந்தன.. நாட்கள் சென்றதும்,
உனக்காய் நான் எனக்கூறிய உதடுகள் எதற்காய் நீ ?என துடித்தது.. உன் இதயம் எனக்கூறிய என் இதயத்தை உடைத்துச் சென்றதற்கு, உந்தன் நினைவுகளை அழித்து சென்றிருக்கலாம்.. என்றேனும் அழியும் எனும் சிந்தையில் நான்...
ஆக்கம்
ஹரிஷ் ராதாகிருஷ்ணன்