தொலைதூரகாதல் தோல்வி
பருவத்தின் தாகமே தீர்ந்தது அவள் பார்வையில்!
சந்திப்புகள் அரிதே எனினும், காற்றலையிலே உயிர்கொண்டோம்..
கனவுகள் உயர்ந்தன நினைவுகள் வளர்ந்தன.. நாட்கள் சென்றதும்,
உனக்காய் நான் எனக்கூறிய உதடுகள் எதற்காய் நீ ?என துடித்தது.. உன் இதயம் எனக்கூறிய என் இதயத்தை உடைத்துச் சென்றதற்கு, உந்தன் நினைவுகளை அழித்து சென்றிருக்கலாம்.. என்றேனும் அழியும் எனும் சிந்தையில் நான்...
ஆக்கம்
ஹரிஷ் ராதாகிருஷ்ணன்

