தேடல் நான்
மகிழ்ச்சியில் மாணவன் மறைவாய் தேடினான் !
இழைப்பாறும் இழைஞன் மோகத்தில் தேடினான்!
மனைவி வீடு சென்ற கணவன் இன்பத்தில் தேடினான்!
காதலை இழந்த காதலன் கண்மணி நினைவாய் தேடினான்!
உடல் உழைக்கும் உழைப்ப்பாளி வலியை மறைக்க தேடினான்!
இன்பத்தில் தேடினான்
துன்பத்தில் தேடினான்
கவலையில் தேடினான்
நினைவில் தேடினான்
வலியில் தேடினான்
வருத்தத்தில் தேடினான்
வறுமையிலும் தேடினான்...
தேடும் மது நான் ...
மனதிற்கு துணையாவதும்
மரணத்திற்கு துணையாவதும் தேடுபவன் கையில்...

