துரோகத்தின் நிறம்

தண்ணீரின் சுவையை விட
எங்கள் கண்ணீரின்
சுவை அதிகமா?
எத்தனை முறை பருகுவீர்கள்
பதுங்கு குழியின் மறைவில்
எங்கள் குழந்தைகளின்
பள்ளிக் கனவும்
மறைக்கப்படுகிறது
பறவைகள் பயந்து போகுமென்று
பட்டசுகளே வெடிக்காமலிருக்கும் போது
எங்கள் உடல்கள் வெடிக்க நீங்கள் பீரங்கிகளை வெடிக்கலாமா?
சமாதானக் கொடியின் வெள்ளை நிறம்
உங்களின் துரோகம் பட்டு
சிவப்பு நிறமானது
நாங்கள் என்ன விலங்குகளா
முள்வேலி என்னும் கூண்டில்
அடைத்து வைக்க
உங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல
எங்கள் குழந்தைகள் மட்டும்
சுடுகாடு செல்லவா !