நிலா நிரஞ்சலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிலா நிரஞ்சலா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Jul-2017
பார்த்தவர்கள்:  202
புள்ளி:  21

என் படைப்புகள்
நிலா நிரஞ்சலா செய்திகள்
நிலா நிரஞ்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2018 1:41 pm

போ நான் துயரப்படவில்லை
துடிக்கின்றேன்..
போ நான் வெறுக்கவில்லை
வேதனைப்படுகிறேன்..
போ நான் நினைக்க மறக்கவில்லை
மறக்க நினைக்கிறேன்...
போ .. நான் தொடர நினைக்கவில்லை
தொலைய நினைக்கிறேன்...
...மீண்டும் ஒருமுறையாவது #வா
இதை மட்டும் தான் எதிர்ப்பார்க்கிறேன்..

மேலும்

எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாறாத வரை வாழ்க்கையில் வன்முறை கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2018 8:11 pm
நிலா நிரஞ்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 12:28 am

சாதாரணமாய் கடந்து போயிற்று
ஒரு தினம்..
காதல் கடந்த பிறகு
கண்ணீர் பயணத்தில்
ஒரு தினம் கடந்து போக
அப்போது நீ இல்லை
என் நினைவுக்குள்
வலித்தாய் ..

உன்னை காலம் பிரித்ததாய்
காதலை சாடி.. காத்திருக்கையில்
கடந்து போனது ஒரு தினம்
அப்போதும் நீ இல்லை
என் நினைவிலிருந்தாய்
பத்திரமாய்....

என் அறியாமை உன்னை
தொலைத்ததாய்
என்னையே மறக்க போராடி
கடந்ததொரு தினம்
அப்போதும் நீ இல்லை
இருந்தாய் என்னுள்
எனக்கே தெரியாமல்..

இன்றும் கடந்து போக
துடிக்கிறது ஒரு நாள்
சாதாரணமாய்..
நீ இல்லை
நினைவில் இருக்கின்றாய்
உன் உருவம் தொலைத்து..

மேலும்

நினைப்பது போல் வாழ்க்கை அமைந்து விட்டால் கண்களுக்கு கண்ணீர் அர்த்தம் கூட புதிராகத்தான் அமைந்திருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 11:09 am
நிலா நிரஞ்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 12:09 am

காதல்..
தூர நின்று
ஒதுங்கி பார்க்கையில்
புரிகிறது
இதயங்கள்
இணைந்திருந்தால்
மணம்..
ஒற்றையாய் தனித்திருந்தால்
மரணம்..

மேலும்

கண்ணீரும் ஓவியன் போலானது நெஞ்சமும் தாடி வைத்த கவிஞனானது அது காதலில் தோற்றவர்களுக்கு மட்டும் கிடைக்கும் பாக்கியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 11:07 am
நிலா நிரஞ்சலா - நிலா நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2018 4:14 pm

உடைந்து அழ
உண்டு ஓராயிரம் வலிகள்..
ஊமையாய் ஒளிப்பதற்கு
ஒரே காரணம் ..
நான் பெண்ணாயிற்றே
வாரி எடுக்கையில்
எல்லாம் வடிந்து
ஓடுகிறது வாழ்க்கை
நீயில்லாமல் ..
உன்னை தேடிவர
துடிக்கின்றேன்
என்னை தடுக்கின்றேன்
ஏனென்றால் நான்
பெண்ணாயிற்றே.
ஒட்டிக்கொள்ள
ஓரிடம் கிடைத்தால்
பற்றிக்கொண்டு
உயிர் விடுவேன்
கிடைப்பவை எல்லாம்
தவிர்த்துச் செல்கிறேன்
ஏனென்றால்
நான் பெண்ணாயிற்றே

மேலும்

நன்றிகள் 08-Feb-2018 8:19 pm
உடைந்து அழ உண்டு ஓராயிரம் வலிகள். ---ஆரம்ப வரிகளே அருமை . நெஞ்சைத் தொட்டது பெண்ணின் சோகம். 08-Feb-2018 8:09 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி 08-Feb-2018 12:36 am
பெண்ணின் ஆசைகளும் உதடுகளின் மெளனம் போல் நெஞ்சுக்குள்ளேயே தொடங்கி அதற்குள்ளேயே முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 9:36 pm
நிலா நிரஞ்சலா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2018 4:14 pm

உடைந்து அழ
உண்டு ஓராயிரம் வலிகள்..
ஊமையாய் ஒளிப்பதற்கு
ஒரே காரணம் ..
நான் பெண்ணாயிற்றே
வாரி எடுக்கையில்
எல்லாம் வடிந்து
ஓடுகிறது வாழ்க்கை
நீயில்லாமல் ..
உன்னை தேடிவர
துடிக்கின்றேன்
என்னை தடுக்கின்றேன்
ஏனென்றால் நான்
பெண்ணாயிற்றே.
ஒட்டிக்கொள்ள
ஓரிடம் கிடைத்தால்
பற்றிக்கொண்டு
உயிர் விடுவேன்
கிடைப்பவை எல்லாம்
தவிர்த்துச் செல்கிறேன்
ஏனென்றால்
நான் பெண்ணாயிற்றே

மேலும்

நன்றிகள் 08-Feb-2018 8:19 pm
உடைந்து அழ உண்டு ஓராயிரம் வலிகள். ---ஆரம்ப வரிகளே அருமை . நெஞ்சைத் தொட்டது பெண்ணின் சோகம். 08-Feb-2018 8:09 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி 08-Feb-2018 12:36 am
பெண்ணின் ஆசைகளும் உதடுகளின் மெளனம் போல் நெஞ்சுக்குள்ளேயே தொடங்கி அதற்குள்ளேயே முடிந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Feb-2018 9:36 pm
நிலா நிரஞ்சலா - நிலா நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 10:12 pm

இதயத்திற்கு
நடிக்கத்தெரியாது
அதுதான்
துடித்துக்கொண்டிருக்கிறது

மேலும்

ஆம் சகோ 31-Jan-2018 12:54 pm
வேஷங்கள் நிறைந்த மனிதர்களின் கூட்டம் தான் இந்த உலகில் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:11 pm
ஆம் தோழி!! 28-Jan-2018 10:44 pm
நிலா நிரஞ்சலா - நிலா நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 10:20 pm

உண்மைகள் வாழ ..
இமைகள் கசியும்
இதயங்கள் உடையும்
சில முகங்கள் சுழிக்கும்
அதனால்
கொஞ்சம் பொய்யாய்
வாழ எத்தனிக்கிறேன்
ஏற்றுக் கொள்க !
இது என்னால் சாத்தியம்
இல்லை எனில்
சகித்து கொள்க!

மேலும்

மிக்க நன்றி சகோ 31-Jan-2018 12:52 pm
விடைகளின் பின் வினாக்களும் வினாக்களின் பின் விடைகளும் மாறி மாறி அமைவது தான் நாம் வாழும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:13 pm
உண்மை தோழி ! 28-Jan-2018 10:43 pm
நிலா நிரஞ்சலா - நிலா நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2018 10:28 pm

நீ எங்கிருக்கிறாய்
என் இதயத்தில் என்று
உன்னை விட
தெரியும் எனக்கு
இதயம் தாண்டி எங்கிருக்கிறாய்
#நானென்றால் நீ விட்டு சென்ற
இடம் விட்டு இன்னும் நகரவில்லை

எப்படியிருக்கிறாய்
நானில்லை தானே நலமாகத்தான்
இருப்பாய்..
#நானென்றால் இருக்கிறேன் ஜடமாக

என்னை நினைவிருக்கிறதா?
அழகற்ற கவிதையை மீள
நினைப்பதிலை என்று
கேட்ட ஞாபகம் இன்னும்
நினைவில் தான்..
என்னை நினைத்திருக்க வாய்ப்பில்லை
#நானென்றால் என்னை மறந்துவிட்டேன்

எப்போது வருவாய்..?
இந்த கேள்விக்கு மட்டும் பதில்
நானே சொல்கிறேன்
நீ வரத்தேவையில்லை..

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி.. 28-Jan-2018 10:09 pm
அடுத்து நிமிடம் என்ன நடக்கப்போகுது என்று தெரியாமல் இருக்கும் வரை தான் வாழ்க்கை அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 12:02 pm
நிலா நிரஞ்சலா - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2017 6:42 pm

என் மேலான "காதல் " முழுதும்
உனக்குள் "அழகு" நயத்தோடு
உலவிக்கொண்டிருக்கிறது !

உன் மேலான "காதல் " முழுதும்
எனக்குள் "கவிதை "நயத்தோடு
உலவிக்கொண்டிருக்கிறது !

இதோ நம் காதலுக்கான
ஓர் !
"அழகு "
"காதல் "
"கவிதை "

மேலும்

தமிழ்ப்பித்தரின் கருத்தில் மகிழ்கிறேன் ...நன்றியும் வணக்கமும் 28-Jul-2017 1:42 pm
அவள் அழகு,காதல் அழகு இவைகளை ரசிக்க உள்ளத்தில் ஊடுருவும் உம கவிதை அழகு அழகு ! வாழ்த்துக்கள் நண்பரே முத்துப்பாண்டியன் 28-Jul-2017 12:24 pm
அழகு கருத்தில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தோழி ...மகிழ்ச்சி ... 28-Jul-2017 10:41 am
அடடே...அருமை...அருமை...எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க...தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துகள்! 27-Jul-2017 8:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே