நான் பெண்ணாயிற்றே
உடைந்து அழ
உண்டு ஓராயிரம் வலிகள்..
ஊமையாய் ஒளிப்பதற்கு
ஒரே காரணம் ..
நான் பெண்ணாயிற்றே
வாரி எடுக்கையில்
எல்லாம் வடிந்து
ஓடுகிறது வாழ்க்கை
நீயில்லாமல் ..
உன்னை தேடிவர
துடிக்கின்றேன்
என்னை தடுக்கின்றேன்
ஏனென்றால் நான்
பெண்ணாயிற்றே.
ஒட்டிக்கொள்ள
ஓரிடம் கிடைத்தால்
பற்றிக்கொண்டு
உயிர் விடுவேன்
கிடைப்பவை எல்லாம்
தவிர்த்துச் செல்கிறேன்
ஏனென்றால்
நான் பெண்ணாயிற்றே