Magal

கடற்கரை மணலில் மகளின்
காலடி தடம் தேடினேன்
கிடைக்கவில்லை வெகு
நேரம் தேடியும்
சுதாரித்து பார்த்த போது
நினைவுக்கு வந்தது
அவளை என் கைகளில்
சுமந்து சென்றது.

பூமிக்கு வந்த இன்னொரு தெய்வம்
சிறகில்லாத பட்டாம்பூச்சி
விளக்கில்லாத மின்மினி
என் சிரிப்பிற்கு அர்த்தம் தந்தவள்.

எழுதியவர் : ALFRED (7-Feb-18, 2:59 pm)
பார்வை : 3422

மேலே