மெட்லிங்க்டன்
வாடா மருத்தவர் வைத்தியலிங்கம். நம்ம
ஊருக்கே உன்னால பெருமையடா.
லண்டனுக்குப் போயி உயர் சிறப்பு
சிகிச்சைப் படிப்பை வெற்றிகரமா
முடிச்சிட்டு வந்திருக்கிற. ரொம்ப
சந்தோசம்டா. இங்க எதாவது உயர்சிறப்பு
மருத்துவமனையிலே வேலக்குச்
சேரப்போறியா?
@@@@@
டேய் மந்தீச்வர், முதல்ல என்னை
வைத்தியலிங்கனு கூப்படறதை
நிறுத்துடா. என் பேரை வெள்ளக்காரர்கள்
எல்லாம் தப்புத் தப்பா உச்சரிக்கிறாங்க.
"வாய்த்த்யா லிங்க், வாட்டியா லிங்க்" னு
கண்டபடி உச்சரிக்கிறாங்க. அதனால்....
@@@#
அதனால் உன் பேரை மாத்தி வச்சிட்டயா?
@@@@@
ஆமாண்டா. அங்கேயே ஒரு பெரிய
மருத்துமனையிலே வேலை கெடச்சது.
மாதம் பத்து லட்சம் சம்பளம். நிரந்தர
குடியுரிமை. இதைவிட வேறென்னடா
வேண்டும். என் பேரு சாமி பேரு. அதுக்குக்
குறை வைக்காம என் பேரை
'மெட்லிங்க்டன்'னு மாத்திட்டேன்.
வெள்ளைக்காரங்க என் பேரை இப்ப
சரியா உச்சரிக்கிறாங்கடா.
@@@@@@@
டேய் வைத்தி.... உம்... மெட்லிங்க்டன் நீ
ரொம்பக் குடுத்து வச்சவண்டா.