கோமியா

சோதிடர் ஐயா, என்க்குத் திருமணம் ஆகி

அஞ்சு வருசம் கழிச்சு பெண் குழந்தை

பிறந்திருக்குது. இந்தாங்க இந்தத் தாள்ல

குழந்தை பிறந்த நேரம், கிழமை,

மருத்தவமனை போன்ற குறிப்புகள்

இருக்குது. நீங்க என் குழந்தையோட

சாதகத்தைக் கணிச்சு குழந்தைக்கு ஒரு

நல்ல இந்திப் பேரைச் சொல்லுங்க ஐயா.

@@@@@@@@

தம்பி தர்னேஷு உங்க தாத்தா

காலத்திலிருந்து நான் உங்க குடும்ப

ஜோதிடர். பத்து நிமிசம் பொறு. கணிச்சுச்

சொல்லறேன்.

(பத்து நிமிடம் கழிச்சு)

தம்பி , உங்க அப்பா காலத்தில் ஒரு நாட்டு

மாடும்


ஒரு ஜெர்சி மாடும் வளர்த்தாரு. ஒரு ஜெர்சி

மாடு மூணு நாட்டு மாடு தின்னற தீனியத்

தின்னும் சோம்பேறி மாடு. ஜெர்சி


இன மாடுகள் வெளிநாட்டிலிருந்து

இறக்குமதியான மாட்டு இனம். அது

கோமாதா அல்ல. நாட்டு மாடு தான்

நம்ம வழிபாட்டுக்குரிய கோமாதா.

உன் அப்பா வளர்த்த கோமாதா அந்த

ஜெர்சி தின்னற பெருந்தீனியைப்

பார்த்து பொறுமி, மனம் நொந்து

மனதளவில் பாதிக்கப்பட்டு சரியா தீனி

தின்னாம்ம இருந்து இறந்து போயிருச்சு.

அப்ப நீ சின்னப் பையன். அந்த கோமாதா

பாவம் உன் பெண் குழந்தையைப்

வருங்காலத்தில் பாதிக்கும். அதனால் நீ

ஒரு நாட்டு மாட்டை வாங்கி வளர்க்கணும்.

அதுக்கு முறைப்படி பூசை செய்து

அதனோட கோமியத்தில் ஒரு சொட்டு

எடுத்து உன் குழந்தை நெத்தில பொடு

வச்சு அவளுக்கு 'கோமியா'னு பேரு வை.

அப்பத்தான் உன் பெண் குழந்தையைச்

சுத்தற கோமாதா பாவம் நீங்கி உங்க

குடும்பம் சுபிட்சம் பெறும்.

@@@@@@@@

அப்படியே செய்யறனுங்க ஐயா.

எழுதியவர் : மலர் (24-Jan-25, 10:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 5

மேலே