ஒரு தினம்

சாதாரணமாய் கடந்து போயிற்று
ஒரு தினம்..
காதல் கடந்த பிறகு
கண்ணீர் பயணத்தில்
ஒரு தினம் கடந்து போக
அப்போது நீ இல்லை
என் நினைவுக்குள்
வலித்தாய் ..

உன்னை காலம் பிரித்ததாய்
காதலை சாடி.. காத்திருக்கையில்
கடந்து போனது ஒரு தினம்
அப்போதும் நீ இல்லை
என் நினைவிலிருந்தாய்
பத்திரமாய்....

என் அறியாமை உன்னை
தொலைத்ததாய்
என்னையே மறக்க போராடி
கடந்ததொரு தினம்
அப்போதும் நீ இல்லை
இருந்தாய் என்னுள்
எனக்கே தெரியாமல்..

இன்றும் கடந்து போக
துடிக்கிறது ஒரு நாள்
சாதாரணமாய்..
நீ இல்லை
நினைவில் இருக்கின்றாய்
உன் உருவம் தொலைத்து..

எழுதியவர் : இவள் நிலா (14-Feb-18, 12:28 am)
Tanglish : oru thinam
பார்வை : 149
மேலே