யாதும் ஊரே யாவரும் கேளிர்

உடன் பிறவா உறவென்ற போதும்
தம்பி தங்கை தமக்கென உணர்வாயடா...

இல்லம் வேரென்ற போதும்
இதயத்தில் இடம் தருவாயடா.....

வீதிக்கு வீதி கொடி வேரென்ற போதும்
விதிக்கு விடை கொடுப்பாயடா.....

ஊர்விட்டு ஊர் வந்த போதும்
உதராது உதவிக்கரம் நீட்டுவாயடா....

மொழியறியா தேசம் கண்ட போதும்
மௌனம் களைத்து அணைப்பாயடா....

கடல் கடந்த நாடென்ற போதும்
கடமையென கட்டவிழ்த்து காப்பாயடா...

சாதி-மத மொழி-இனம் வேரென்ற போதும்
இவன் மானிடன் என மதிப்பாயடா.....

அஃதே

யாதும் ஊரே யாவரும் கேளீரென
கணியன் கண்ட கணவடா....

இன்று

அக்கனவு மெய்ப்படவே
யாதும் ஊரே யாவரும் கேளிர் மானிடா !!...

எழுதியவர் : தஞ்சை குணா (மு.குணசேகரன்) (30-Dec-21, 2:50 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 93

மேலே