விதை

வானம் தொலைந்ததென்று
கடலில் புதைந்து போனேன்..
புதைத்ததை எல்லாம்
பொசுக்கும் நினைவுகள்
விதைக்கின்றன..
விதை வளர்ந்து விழுது
தட்டி நின்றபோதும்..
கதை முடிந்து காணாமல்
சென்ற போதும்..
புதைத்ததை நான்
புன்னகையுடன் ,
புண் நகையுடன்
ஏற்கிறேன்..
என்னை எனக்கு தெரியும்
என்றும் நான் நிஜமானவள்.

எழுதியவர் : இவள் நிலா (5-Feb-18, 4:28 pm)
Tanglish : vaithai
பார்வை : 60

மேலே