இரயில்வே நிலவு
இரவின்-ஒளியிலே
நிலவாய் வெண்பனியாய்
சிரிக்கும் பெண் நிலவே
இனி தினமும் எனைக்கொல்லும்
பேரழகே
நீ அசையும் அழகினில்
புது அகிலமும் தோன்றுமடி
உன் கொலுசின் சினுங்களில்
என் இதயம் விழித்ததடி
இதழ் சிரிப்பினில் விழி பறித்தாய்
இமை எங்கிலும் நீ நிறைந்தாய்
விழிகள் இணையும் நேரம்
விலகி செல்வது ஏனடி
இனி தொடங்கும்
இந்த ரயில் பயணம்
இனிதே முடியட்டும்...
இனி எப்போது பார்பேன்
இரவின் ஒளியில் என் நிலவை.....