துள்ளுகின்ற இன்பங்கள் துயரத்தை நீக்கிடுமே
ஊஞ்சலிலே ஆடிடவே உன்மத்தம் கொண்டேனே
பசுமையான சோலைக்கோ பந்தங்கள் ஒன்றுசேர
புதுமையான விளையாட்டாம் புத்துணர்வு தந்திடுமே .
மங்கையான் அமர்ந்திடவும் மதியாகி ஊர்வலமாய்
பயணங்கள் தொடர்ந்திடுமே பாசங்கள் சேர்ந்திடுமே .
பருவங்கள் தப்பாது பாரினிலே மழைபொழிய
விடலைபோல் நானேறி வியன்பொருளாய் நின்றிடுவேன் .
துள்ளுகின்ற இன்பங்கள் துயரத்தை நீக்கிடுமே !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்